எம்.பி சு வெங்கடேசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மாணவி ஒருவர் கேட்ட கேள்வி அதற்கு அவர் வைத்த பதிலையும் வீடியோவாக தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அதே பப்ஸ் தான். அதே அளவு தான் ஆனால் ஜிஎஸ்டி வந்து விலை மட்டும் கூடிவிட்டது என்று சொல்ல அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவிகளும் ஆரவாரம் செய்து ஆதரித்தார்கள். இதற்கு என்னுடைய பதிலும் முடிவாகி விட்டதால் மட்டும் GST சரியானதாகி விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். கல்லூரி நிகழ்ச்சியில் மாணவி ஒருவர், பப்ஸ் அதேதான் அளவும் அதே அளவாக தான் இருக்கிறது.
ஜிஎஸ்டி வந்த பிறகு பத்து ரூபாய் பப்ஸ் 15 ரூபாயாக மாறிவிட்டது. அனைத்து பொருட்களின் விலையும் இப்போது அதிகமாகி விட்டது. இந்த விலையேற்றத்தால் நாங்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பில் உள்ள மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு தீர்வாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? மேலும் இதில் மாற்றம் உங்களால் கொண்டு வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மாணவிகளும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதற்கு பதிலளித்த எம்பி வெங்கடேசன், பிரமாதமான கேள்வி இது. இந்திய பொருளாதாரம் சம்பந்தமாக இதைவிட நல்ல ஒரு கேள்வி கேட்க முடியாது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 400 பக்கங்களைக் கொண்டது. இது முழுவதுமாக படித்துவிட்டு நாம் கடைசியாக வந்து நிற்கும் இடம் கூடிவிட்டது ஏன் என்பதாகத்தான் இருக்கிறது. விலையேற்றதிற்கு காரணம் ஜிஎஸ்டி என்கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டோம். அதனால் தான் இந்த விலையேற்றம் என்று கூறுகிறார்கள். அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டால் ஒரு தவறு சரியாகிவிடாது. எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்தாலும் தவறு தவறு தான் என்று கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் இந்த பப்ஸ் என்ற வார்த்தையை விட்டுவிட்டு இது குறித்து தமிழகத்தில் இருந்து சென்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி எதற்கு என்று கேள்வி எழுப்பிகிறோம். இதற்கு தீர்வு பப்ஸ் சாப்பிடுகிற அனைவரும் எனது பப்ஸ் விலை ஏன் அதிகமாகிவிட்டது என்று கேள்வி கேட்கும் பொழுது மட்டும்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். அரசியல் வட்டாரத்திலும் இந்த மாணவியனுடைய கேள்வி பெரும் கவனத்தை பெற்றுள்ளது.