விமான நிலையங்களில் 3,049 மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சிஏஎஸ்எப் வீரர்களுக்கு பதில் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் விமான நிலையங்களில் சி ஏ எஸ் எப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஏஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே இந்த இடங்களில் தனியார் செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்த சி ஐ எஸ் எப் படை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவர்கள் டெல்லி மற்றும் மும்பை போன்ற விமான நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ள தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் காத்திருக்கும் வரிசையை நிர்வகித்தல் முனைய பகுதிகளுக்குள் இருக்கும் சில நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட முக்கியமற்ற அலுவலகங்களில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.