செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் சமமானவர். தமிழக முதலமைச்சர் மற்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதும், விழாக்களுக்கு சென்று பங்கேற்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்தியாக இருக்கட்டும் அல்லது இந்து பண்டிகைகளாக ஆகட்டும் அதற்க்கு அவர் வாழ்த்து சொல்லுவது இல்லை. அதை அவர் ஒரு வழக்கமாக வைத்துள்ளார்.
அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்து அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் கூட, தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்ற விதத்தில் வாழ்த்து சொல்ல கடமை பட்டு இருக்கிறார். அவர் அந்த கடமையில் இருந்து தவறி இருக்கிறார் என்பது தமிழக மக்களினுடைய கருத்தாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன்னால் நாம் வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். அந்த வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைப் பார்த்து பயந்து கொண்டு ஓட்டுக்காக இன்றைக்கு வேலை ஏந்தினார் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் இன்றைய முதலமைச்சர் அவர்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால் ஓட்டுக்காக ஒரு நாடகத்தை நடத்தாதீர்கள். உண்மையான பற்றை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.
அப்படி என்றால் நீங்கள் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பது இன்றைக்கு பொதுமக்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆகையால் அவர் வருகின்ற அடுத்த நிகழ்ச்சிகளில் அல்லது அடுத்த பண்டிகைகளில் நிச்சயமாக வாழ்த்து சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படி சொல்லவில்லை என்றால் பொதுமக்களும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும்போது அதற்கு எந்த பாடத்தை சொல்ல வேண்டுமோ அந்த பாடத்தை சொல்வார்கள் என்று சொல்லிக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.