Categories
சினிமா தமிழ் சினிமா

வாழுங்கள்!… இந்த டைம் மட்டும்தான் நம்மிடத்தில் இருக்கு…. நடிகை மீனா உருக்கமான பதிவு….!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்ற ஜூன்மாதம் இறந்துவிட்டார். பல்வேறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார். இவ்வாறு கணவர் இறப்பால் பல தினங்கள் துக்கத்திலிருந்த மீனா, இப்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். அதன்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார்.

அண்மையில் மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதனிடையில் மீனா தன் இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது “தன் இளம்வயது புகைப் படங்களை பதிவிட்டு அதனுடன் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது. அதனை வாழுங்கள். இந்த நேரம் மட்டுமே நம்மிடம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். அத்துடன் திரைபிரபலங்களும் நம்பிக்கையான வார்த்தைகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |