Categories
தேசிய செய்திகள்

திடீர் விலை குறைவு…. இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. புதிய ரேட் இதுதான்….!!!!

உலக சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை இங்கு குறைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுடன் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி அதிகரித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது.இந்த அறிவிப்பை இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் டின் தற்போது 1760 ரூபாயாக குறைந்துள்ளது.பாமாயில் விலை சரிவால் கடலை எண்ணெய் டின்னுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 2900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.எள் வரத்தை இல்லாததால் நல்லெண்ணெய் டின்னுக்கு 165 விலை அதிகரித்து கடந்த வாரம் 5115க்கு விற்ற நல்லெண்ணெய் 15 கிலோ டின், தற்போது 5280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Categories

Tech |