Categories
உலக செய்திகள்

OMG: “13,000 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது கீழே விழுந்த வீரர்கள்”… 6 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

ரஷ்ய மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது 13,000 அடி உயரத்தில் மலையேற்ற வீரர்கள் ஆறு பேர் கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் குளுச்செவ்ஸ்கயா சோப்கா என்னும் மிகப்பெரிய எரிமலை ஒன்று அமைந்துள்ளது. 1584 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை யுரோசியாவின் மிக உயரமான எரிமலையாக விளங்குகிறது. மேலும் இது ரஷ்யா மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களிடம் புகழ்பெற்ற மலை சிகரமாகவும் இருக்கிறது. இந்த சூழலில் உள்நாட்டை சேர்ந்த 10 மலையேற்ற வீரர்கள் மற்றும் இரண்டு வழிகாட்டிகள் கடந்த 30ஆம் தேதி இந்த மலையில் ஏறும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர்கள் மழையின் 10,827 ஏழு அடி உயரத்தை சென்றடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு முகாம் அமைத்து ஓய்வெடுத்துள்ளனர்.

பின் அந்த 12 ம வீரர்களின் 9 பேர் மலை சிகரத்தை அடைய தொடர்ந்து மழையேற தொடங்கியுள்ளனர். மேலும் 3 பேர் மட்டும் முகாமில் இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மலையற்ற வீரர்கள் 13,000 அடி உயரத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களின் நான்கு பேர் திடீரென கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் மேலும் இரண்டு வீரர்கள் கீழே விழுந்துள்ளனர். 13000 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மலையற்ற வீரர்கள் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். ஆனால் மோசமான வானிலையின் காரணமாக மீட்பு குழுவால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. இதனால் எரிமலையில் 10 ஆயிரத்து 827 அடி உயரத்திலும் 13 ஆயிரத்து அடி உயரத்திலும் சிக்கி இருக்கும் ஆறு மலை ஏற்ற வீரர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது எனினும் அவர்களை பத்திரமாக மீட்க முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |