Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் பாகிஸ்தான்… பாதிப்பு இடங்களை ஆய்விட்ட அமெரிக்க குழு…!!!!!

பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழை பாதிப்பு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு அந்த நாடு நீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும் கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 1200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் 400 பேர் குழந்தைகள் அடங்கும்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட அமெரிக்காவை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சென்றிருக்கின்றது. பாகிஸ்தானிற்கான அமெரிக்க தூதர் டொனால்ட் போன்றவரை கொண்ட இந்த குழு சிந்து மாகாணத்தின் தாது மாவட்டத்திற்கு சென்று வெள்ள நிலைமையை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும் வான்வழியேயும் சென்று பார்வையிட்டுள்ளது. இதில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி குழுவினருக்கு அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்து இருக்கின்றனர். வெள்ளம் பாதித்த மக்களை நேரில் சந்தித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையை சேர்ந்த தலைவர் ஷீலா ஜாக்சன் லீ அவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். அமெரிக்கா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு மனிதநேய உதவியாக கூடுதலாக 239 கோடியை அறிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நேரடியாக உதவி சென்று சேரும் விதமாக ஆதரவு நிதியாக இந்த மாத தொடக்கத்தில் மானிய அடிப்படையில் 87.6 கோடியை அமெரிக்கா வழங்கி உள்ளது.

Categories

Tech |