தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு உலக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஸ்டைல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இவருக்கு புகழும் ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ‘நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று அவ்வப்போது கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை ஓட வைக்கும் யுக்தியாகவே அரசியல் குறித்து பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததால் இந்த சூழலை தனக்கு சாதகமாக ரஜினி முடிவு செய்தார். அதற்காக தமிழக அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ரஜினி கூறியதால் அரசியலில் களம் சூடு பிடித்தது. இதற்கிடையில் ஆலோசனைக் கூட்டம், நேர்காணல் என அரங்கேறி பரபரப்பை கூட்டியதால் ரசிகர்கள் இன்ப கடலில் மூழ்கினர்.
இந்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அரசியல் ஆசையை கைவிடுவதாக ஒட்டுமொத்த வதந்திக்கும் ரஜினி முற்று புள்ளி வைத்தார். இதனால் விரத்தியும், அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான கட்சிகளில் ஐக்கியமாகினர். அதன் பிறகு ரஜினி குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதற்கிடையில் ரஜினி நடித்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி திடீரென பிரதமர் மோடியிடம் ஓரிரு நிமிடம் பேச வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ரஜினி பேசியது பெரிதும் பேசு பொருளாக மாறியது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, தமிழக ஆளுநருடன் அரசியல் பற்றி பேசுவதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு தமிழக நலனுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதாக ஆளுநர் கூறியதையும் ரஜினி போட்டு உடைத்தார். ரஜினி இந்த பேட்டி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவரது சகோதரர் சத்திய நாராயணராவ் அதை உறுதி செய்யக்கூடிய வகையில் கூறி இருக்கும் தகவல் மீண்டும் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி வருகிறது.
அதாவது சென்னை வியாசர்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளை தொடங்கி வைத்த சத்தியநாராயண நடிகர் ரஜினிகாந்த் படபிடிப்புகள் முடிந்த பிறகு ரசிகர்களை சந்திப்பார். இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்தின் பிறகு அமைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் உள்ளது என்று கூறினார். இது குறித்து ரஜினி ரசிகர்கள் சிலரிடம் விசாரித்த போது, ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதெல்லாம் பொய். சமீப காலமாக தலைவர் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அதே நேரத்தில் தலைவருக்கு போட்டியின் நடிகர் கமலின் விக்ரம் படம் வசூலை வாரி குவித்துள்ளது. எனவே விக்ரம் வசூலை முறியடிக்க தலைவர் போடும் பிளான் தான் அரசியல் சப்ஜெக்ட். தலைவர் படம் பார்க்கிறதோட சரி நாங்களே இப்பல்லாம் அவரை நம்புறது இல்லை. அவரை நீங்களும் நம்பாதீங்க ப்ரோ. உச்சத்தில் அமர வைத்து அழகு பார்த்த எங்களை ஏமாற்றுகிறார். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? என நமக்கே ரஜினி ரசிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ரஜினி முகத்திரையை கிழிக்கும் விதமாகவே உள்ளது.