குக் வித் கோமாளி புகழ் அவரின் நீண்டநாள் காதலியான பென்ஸ் ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக புது மண தம்பதிகளான அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வந்தனர் . இவரும் மறைந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜியும் மிக நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில், மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தை பதிவிட்டு, “உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது.
உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை. நீங்கதான் எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்” என்று பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் புகழுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.