செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோத்தபாய ராஜ்பக்சே மீண்டும் இலங்கை திருப்புவதற்கு ஆதரவான சூழல் உருவாச்சு, அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், அதற்கான ஆதரவான சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது 30,000 கோடிக்கு மேல் உலக நாடுகளில் நிதி தருவதாக இருக்கிறது. அதனால் அந்த சூழல் உருவாக்கி, அதில் உள்ளே கொண்டு வருகிறார்கள், அதில் எனக்கு ஒன்றும் பெரிய கருத்து இல்லை.
அதிமுக வழக்கில் மாறி மாறி தீர்ப்பு வந்தது நீதிபதி பெருமக்களினுடைய, நீதி அரசருடைய விளையாட்டு, நாம் அப்பாவி பிள்ளைகள், சின்ன பிள்ளைகள், நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வழக்கு, ஒரு நாடு, ஒரு சட்டம் எத்தனை தீர்ப்பு வருகிறது என்று பார்க்கிறீர்கள். கீழமை நீதிமன்றத்தில் விடுதலை, உயர்நீதிமன்றத்தில் தண்டனை, உச்சநீதிமன்றத்தில் விடுதலை. இப்படியெல்லாம் தீர்ப்பு வந்து இந்த நாட்டில் தான் நடக்கிறது.
நான் சொல்வது நீண்ட காலமாக… பன்னெடுங்காலமாக இந்த நாட்டில் தீர்ப்பு வழங்கப்படுதே ஒழிய, நீதி வழங்கப்படவில்லை, இனியும் வழங்கப்பட போவதுமில்லை. அதிமுகவில் நடப்பது அது அவர்கள் கட்சி பிரச்சனை, அது எனக்கோ, என் நாட்டு மக்களுக்கோ பிரச்சனை அல்ல. அதனால் அதை பேசுவதாக இல்லை. நான் சொல்வதை போய் மக்களிடம் சேர்த்தீர்கள் என்றால் இந்த பிள்ளை சொல்வது நியாயம் தான் என்று சொல்வார்கள். நாங்கள் அறத்தின் வழி நின்று எங்கள் உரிமையை கேட்கிறோம். அதன் வழி நின்று நீங்கள் யோசிங்கள், தர்மத்தின் வழி நின்று இந்த பிள்ளைகள் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது யோசியுங்கள் ? அதை தான் நான் வேண்டி கேட்கிறேன் என தெரிவித்தார்.