பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 6-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் முன்னிலையில் தான் விழா நடைபெற இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் இணையவுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக இணையதளத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.