செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமைக் கழக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 11.7.2022 அன்று கழகத்தினுடைய பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு ஓ. பன்னீர்செல்வம், திரு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், திரு ஜேசிடி பிரபாகரன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அவர்களுடன் குண்டர்கள், ரவுடிகள் போலீஸ் பாதுகாப்போடு, போலீஸ் பாதுகாப்பு அளித்து கொண்டுவர திரு ஓ பன்னீர்செல்வம் தன் வாகனத்தில் அமர்ந்து கொண்டு அந்த குண்டர்களை அலுவலக சாலையில் இருந்து அனைத்து வாகனங்களையும் அடித்து உடைத்து,
அங்கிருந்த கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அடித்து, தலைமை கழகத்திற்குள் இருந்த பிரதான வாயிலை உடைத்து, அலுவலகத்திற்குள் நுழைந்து அடித்து உடைத்து சேதப்படுத்தியதை இங்கு இருக்கின்ற ஊடகங்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பின. தமிழகத்தில் இருந்து அனைவரும் அதை பார்த்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக அன்றே சென்னை மாவட்டத்தின் செயலாளர் ராஜராஜன் அவர்கள் புகார் அளித்தார்கள். ஆனால் சென்னை மாநகர காவல் துறை நாங்கள் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களாகவே ஒரு புகாரை உதவி ஆய்வாளர் மூலம் பதிவு செய்து, அடிபட்டவர்கள் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,
அலுவலகத்தை தாக்கி சூறையாடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகார் கொடுத்தவர்களையும், காயமடைந்தவர்களையும் 14 பேரை கைது செய்தது இந்த காவல்துறை. பிறகு திட்டமிட்டு அன்று நடத்தப்பட்ட தாக்குதல், திராவிட முன்னேற்றக் கழகம் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்டாலின் அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அலுவலகத்தை சீல் வைத்தது. அதை எதிர்த்து எங்களுடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கிலே நீதிமன்றம் 20.7.2022 அன்று தீர்ப்பு வழங்கி இந்த அலுவலகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைக்கால பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி இடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 21/7/2022 அன்று அலுவலகம் திறந்து அலுவலகத்தினுடைய மேலாளர் திரு மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது, அன்று நானும் இருந்தேன்.திறக்கப்பட்ட அந்த அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தன்னுடைய தலைமை அலுவலகம் முழுமையாக அடித்து உடைத்து சூறையாடப்பட்டிருந்தது,
அனைத்து அறைகளும் குறிப்பாக மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டுகாலம் தமிழகத்தின் அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் இருந்து அமர்ந்து பணியாற்றிய அறை முழுமையாக அடித்து உடைத்து நொறுக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த முக்கிய பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் நேரடியாக தொல்லையை காட்சியில் நேரடியாக பார்க்கப்பட்டது. இப்படி இந்த அலுவலகம் சூறையாடப்பட்டு, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை 23.7.2022 அன்று நானே ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
புகார் அளித்த பிறகும் அந்த புகாரை பதிவு செய்யவில்லை. 25ம் தேதி அன்று நான் கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை என்று, தமிழகத்தினுடைய உள்துறை செயலாளர் காவல்துறை தலைவருக்கும் முறையாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதை தொடர்ந்து நான் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். நடந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் திராவிட முன்னேற்றக் கழகம். ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் முழுக்கமுழுக்க துணையிருந்து, குற்ற சம்பவத்தை நிறைவேற்றி கொடுத்தது துணையாக செயல்பட்டது இந்த காவல்துறை.
ஆகவே தமிழகத்தினுடைய காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் அல்லது வேறு தனி விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் 25.8 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசின் உடைய அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் 13.8 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்பட்டது.
11/7/2022 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அத்துமீறி நுழைந்து, அலுவலகத்தை உடைத்து, அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்து ஆவணங்கள் எல்லாம் கொள்ளையடித்து சென்ற திரு ஓ பன்னீர்செல்வம் உட்பட அவருடன் வந்த குண்டர்களையும், ரவுடிகள் மீதும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்து 53 நாட்கள் ஆகிறது. 23ஆம் தேதி நான் கொடுத்த புகார் இன்றோடு 41 நாள் ஆகிறது. தமிழக அரசு என் புகார் இணை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடிக்கு மாற்றி பதிவு செய்து இன்றோடு 21 நாள் ஆகிறது என தெரிவித்தார்.