இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போட்டு பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பசுவையும், இரண்டு கன்று குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.