திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை புகார் அளித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் நடிகையுமான அர்ச்சனா கௌதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்து ஊழியர்கள் அநாகரிகமாக பேசியுள்ளனர். மேலும் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை வழங்கியதன் பிறகு விஐபி டிக்கெட் 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
भारत के हिंदू धर्म स्थल लूट का अड्डा बन चुके हैं धर्म के नाम पर तिरुपति बालाजी मैं महिलाओं के साथ अभद्रता करते,यह टीटीडी के कर्मचारी पर कार्यवाही होनी चाहिए । मैं आंध्र गवर्नमेंट से निवेदन करती हूं।ओर यह VIP दर्शन के नाम पर 10500 एक आदमी से लेते है । इसे लूटना बंद करो । @INCIndia pic.twitter.com/zABFlUi0yL
— Archana Gautam (@archanagautamm) September 5, 2022
இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கௌதம் என்று தனது twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். vip தரிசனம் என்ற பெயரில் 10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டினார்.