Categories
சினிமா

அவரை மாதிரி நீயும் முன்னேறுவ!…. விஜய் அண்ணா கொடுத்த நம்பிக்கை…. நடிகர் சாந்தனு சொன்ன சொல்….!!!!

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமார வேலன் இயக்கி இருக்கும் “சினம்” திரைப்படத்தில் அருண்விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலக்லால்வாணி நடித்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் திரைத் துறையினர், படக்குழு என பலரும் பங்கேற்றனர்.

அப்போது நடிகர் சாந்தனு கூறியிருப்பதாவது “எனக்கு அருண் விஜய்யை மிகவும் பிடிக்கும். தனி நபராக அவரைப் பிடித்ததைத் தாண்டி, அவருடைய சினிமா வாழ்க்கை பயணமும் பிடிக்கும். மற்றதுறைகளில் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால் திரைதுறையில் திறமையைத் தாண்டி வேறுசில விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்க வேண்டியுள்ளது. எவ்வளவோ தடைகள், விமர்சனங்களைத் தாண்டி இன்று தனக்கான இடத்தை அருண்விஜய் பிடித்திருக்கிறார். என்னுடைய ஒரு படம் சரியாக போகவில்லை என விஜய் அண்ணாவிடம் சொல்லி வருத்தப் பட்டேன். அப்போது அவரும் அருண்விஜய்யை உதாரணமாகச் சொல்லித்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இத்தனை வருடம் கஷ்டங்களைத் தாண்டி இன்று நல்ல இடத்திற்கு அருண்விஜய் வந்துட்டாருல, அது மாதிரி உனக்கும் நடக்கும் என்றார்” என்று கூறினார்.

 

Categories

Tech |