மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வோடபோன் உட்பட பல நிறுவனங்களின் நெட்வொர்க் சேவையை முடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப சேவை அளித்து வரும் ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் அலைவரிசை கட்டணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தாமல் இழுத்தடித்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதிமன்றம் கட்டணத்தை உடனடியாக வசூல் செய்யுமாறு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து பிப்ரவரி 20ஆம் தேதி 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த ஏர்டெல் நிறுவனம் முன் வந்தது , மீதித் தொகையை மார்ச் 15-ஆம் தேதிக்குள் செலுத்த சம்மதித்துள்ளது. ஆனால் 55 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு உத்தரவிட்டிருப்பதால் வோடாபோன், ஐடியா நிறுவனம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
பங்குச் சந்தைகள் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன இக்கட்டான சூழ்நிலையில் விரைவில் வோடாபோன் , ஐடியா நிறுவனம் முடக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பொதுத்துறை நிறுவனங்களான கெயில் , ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடியை உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.