Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில்….. பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு….. ஓட்டம் பிடித்த மணமகன்….. மணமகள் தவிப்பு….!!!!

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீரென்று ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த குமுளி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் செங்கல்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. நேற்று மாலை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 11 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து மணமகளும் மணமகனும் போட்டோ எடுத்து விட்டு பின்னர் சதீஷ்குமார் அவரின் அறைக்கு சென்றுள்ளார்.

இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக மணமகன் அறைக்கு சென்று சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது அவர் இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மயக்கமாகி இருந்தனர். மணமகன் சதீஷ்குமார் ஓட்டம் பிடித்திருந்தது தெரிவித்து வந்தது. மணப்பெண்ணும் திருமணத்துக்கு வாழ்த்து வந்த உறவினர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. புதுமண ஜோடியை வாழ்த்த வந்த உறவினர்கள் கவலையுடன் திரும்பினார். திருமணம் நின்று போனதால் திருமணம் மண்டபம் கலை இழந்து போனது. மணமகளுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் தவிர்த்தனர். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |