காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுவது நல்லது என பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் CMSR எனும் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு அண்மையில் பொதுமக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதாவது பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் 9048 நபர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்களுடைய போக்குவரத்து நிறுவனங்கள் முழுவதையும் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். டெலிவரி நிறுவனங்களால் தான் காற்று மாசுபாடு அதிக அளவில் ஏற்படுவதாக 78% மக்கள் கருத்து கணிப்பில் கூறியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 86 சதவீத பொதுமக்கள் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனத்திற்கு மாறுவது நல்லது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து டெலிவரி, இ-காமர்ஸ், மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருதற்கான சூழலை ஏற்படுத்துவதோடு, இணைய வர்த்தகத்துறை, விற்பனை பிரிவு மற்றும் விநியோக பிரிவிலும் மின்சார வாகன பயன்பாட்டினை கொண்டு வருவதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.