Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருட முயன்ற ஆசாமிகள்”…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!!!!

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்கள் கடைக்குள் மது அருந்திய பொழுது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி கிராமம் இருக்கின்றது. இங்கிருக்கும் மதுபான கடையில் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்காக கடையில் பின்பக்க சுவரை கடப்பாறை கொண்டு துளையிட்டு உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே சென்றவர்கள் மது குடித்ததில் போதை தலைக்கேறி வந்த வேலையை மறந்து அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் கடையின் அருகே பேச்சு சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்த பொழுது கடையின் பின்பக்க சுவரைத் துளையிட்டு திருட வந்தவர்கள் கடையில் உள்ள போதையில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தார்கள். பின் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

Categories

Tech |