Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்யணுமா?…. மொபைல் மட்டும் இருந்தா போதும்…. வேலை ரொம்ப ஈஸி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம்.வங்கி கணக்கு முதல் சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் நமது பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள இருந்தால் இனிமேல் ஆதார் மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது புதிய வசதியை அரசு கொண்டுவந்துள்ளது.வீட்டிலிருந்து கொண்டே மொபைலில் உங்களின் ஆதார் விவரங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. அதன்படி மக்களின் சுய விவரங்களை ஆன்லைனில் எளிதாக ஆதார் அட்டையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

எஸ் எம் எஸ் மூலமாக அனுப்பப்படும் ஓடிபி மூலம் அங்கீகரிக்கப்படும். ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள யுபிஐ மூலம் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.அதே சமயம் ஆதார் உடன் மொபைல் எண்ணை இணைத்தவர்களால் மட்டுமே ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால் ஆதார் மையங்களுக்கு சென்று முதலில் என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள்.நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விவரங்களை மாற்றினால் அல்லது திருத்தியமைத்தால், ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வமான https://ssup.uidai.gov.in/ssup/ என்ற இனையதளத்தில் நீங்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Categories

Tech |