Categories
மாநில செய்திகள்

அடடே…! விரும்பிய பைக்கை வாங்க இளைஞர் செய்த நெகிழ்ச்சி செயல்…. திகைத்துப்போன ஷோரும் ஊழியர்கள்..!!!!!!

ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பேருந்துகளில் வாங்க மறுத்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடி ஆகவேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பைக்கை பத்து ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெறவேண்டும் என உறுதியளித்துள்ளார். இதற்காக கடந்த மூன்று வருடங்களாக தனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் போன்றவருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்துள்ளார்.

அதன் பின் இன்று அவற்றை எட்டு பைகளில் கட்டிக்கொண்டு ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் இதற்கு வந்துள்ளார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கேட்டதும் அவர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரை கம்பளத்தில் கொட்டி என்னும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து 3 மணி நேரம் என்னப்பட்டு அதில் தவணைத்தொகை ஒரு லட்சத்து 80 ஆயிரம் இருந்ததாகவும் மீதி தொகையை லோன் மூலம் வழங்க ராஜு உறுதியளித்ததையும் ஏற்றுக்கொண்டு ஷோரூம் நிர்வாகத்தினர் ‘அப்பாசி ஆர் ஆர் 310’ என்னும் புதிய ரக நவீன வடிவமைப்பு கொண்ட மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த ருசிகர சம்பவத்தால் ஷோ ரூமில் பகுதியில் கலகலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |