பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிய சம்பவத்தில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர்தப்பிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நோக்கி நடந்து செல்கிறார்.அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்னால் வந்து மோதியது.
உடனே ஆட்டோ சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விழுந்தது. அப்போது சாலையில் நடந்து செல்லும் பெண் இரு வாகனங்களுக்கு இடையில் வந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் எந்தவித சேதமும் இல்லாமல் உயிர் தப்பினார். இந்த வீடியோவை இந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் தனது லிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் இவ்வளவு பெரிய விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Narrow escape but how long do we depend on luck?
Be responsible on Roads #RoadSafety pic.twitter.com/JEck2aXIuK
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 1, 2022