சீரியல் நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரவீந்தர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்கள் ரவீந்தருக்கு இணையத்தில் சாபம் விடுகின்றனர். அதாவது நாங்க எல்லாம் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறப்போ உங்களுக்கு மட்டும் எப்படின்னா லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சது.
நீங்க லட்டு மாதிரி இருக்கிற மகாலட்சுமியை எப்படி கல்யாணம் பண்ண சீக்ரெட்ட எங்களுக்கும் சொல்லுங்க என்று இணையத்தில் கேட்டுள்ளனர். அதோடு நீங்க நல்லா இருப்பீங்களா என்று சாபமும் விட்டுள்ளனர். இது தொடர்பாக ரவீந்திரர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது எனக்கு ஏற்கனவே தெரியும். நான் மகாலட்சுமியே கல்யாணம் பண்ணுனா 90’ஸ் கிட்ஸ்கள் கண்டிப்பா எனக்கு சாபம் விடுவாங்கனு தெரியும். நான் ஏற்கனவே மகாலட்சுமி கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன். நான் சொன்ன மாதிரியே இப்ப நடக்குது. அயோக்கிய பயலுக. என்னையும் சேர்த்து திட்டுறாங்க. நான் என்னமோ அவங்களுக்கு துரோகம் பண்ண மாதிரி சீன் கிரியேட் பண்றாங்க. இதனால தான் மகாலட்சுமி கிட்ட நல்லா யோசி எனக்கு பதில் சொல்லுங்கன்னு சொன்னேன் என்று கூறியுள்ளார்.