Categories
உலக செய்திகள்

எல்லாமே போச்சு…! உஷாரா இருங்க மக்களே….. கதறி அழுத பெண்…. வைரலாகும் video…!!!!

மலேசியாவை சேர்ந்தவர் ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு ஆசையாய் ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.

பின்னர் இது குறித்து தனது அம்மாவிடம் கேட்டபோது பணம் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சோதனை செய்தபோது அவர் தவறுதலாக வேறு யாருக்கோ பணத்தை அனுப்பியுள்ளது தெரியவந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மாற்றி அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரோ, ‘ பணத்தை திரும்ப கொடுக்க முடியாது, தானமாக கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த பெண், இது குறித்து கண்ணீருடன் வீடியோ பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வரும் நிலையில், பெண்ணின் நிலையை கண்டு பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |