Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கு BJPயிடம் கையேந்தும் ADMK – கே.சி பழனிசாமி அதிரடி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, கூட்டணிக்கு ஒரு  கட்சியை இழுத்து, அவர்களுக்கு ஆறு சீட்டு, ஏழு சீட்டு என்று தகுதிக்கு மீறி அவர்களுக்கு அந்த சீட்டு கொடுப்பதை விட….  நம்மோடு இந்த இயக்கத்தில் பயணிக்கிறவர்களை அரவணைத்து,  அவர்களையும் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்துகிற போது ஒரு வலிமையான அண்ணா திமுகவாக இருக்கும்.

இன்றைக்கு இபிஎஸ் ஆகட்டும், ஓபிஎஸ் ஆகட்டும் சாதிய பார்வை, லஞ்சம், ஊழல், நிறைய சம்பாதித்தவர்களுக்கு, நிறைய செலவு செய்பவர்களுக்கு முதலிடம். தொண்டர்கள் முழுமையாக இன்றைக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு தலைமை பொறுப்பு என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு எந்த விதமான நெருங்கிய தொடர்பும் இல்லை. ஏதோ காசு கொடுத்தால் கூட்டத்தை சேர்த்துக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தில் பயணிக்கின்ற எண் போன்றவர்கள்,  மேடையில் இருக்கின்ற திரு கண்ணப்பன், சத்யநாராயணன் போன்றவர்களும் பார்த்தீர்கள் என்றால்..  அந்த காலத்தில் இருந்தே கிளை செயலாளராக இருக்கிறார்கள்.அண்ணா திமுகவை அடிப்படை உறுப்பினர்களது உரிமைகள், அவர்களது எண்ணங்கள், புறக்கணிக்கப்படுகிறது.

அந்த எண்ணங்களை ஒன்று திரட்டி வலிமையான அண்ணா திமுகவை கட்டமைக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |