Categories
உலக செய்திகள்

“இதுதான் சரியானதாக இருக்கும்”…. லிஸ் ட்ரஸ் குறித்து கருத்து பதிவிட்ட ரிஷி சுனக்….!!!!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்ட பிறகு ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில் லிஸ் ட்ரஸ்க்கு கடினமான போட்டியாளராக இருந்த ரிஷி சுனக் 43 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்ட பிறகு ரிஷி சுனப் தனது  ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது இந்த பிரச்சாரத்தில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி. பழைமைவாதிகள் அனைவரும் ஒரே குடும்பம் தான் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். மேலும் புதிய பிரதமரான லிஸ் ட்ரஸ் நாட்டை கடினமான காலங்களில் வழிநடத்திச் செல்லும் போது நாங்கள் இப்போது அவருக்கு பின்னால் ஒன்றுபடுவது தான் சரியானதாக இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |