Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘ரஜினி மலை, அஜித் தலை’ அமைச்சர் புகாழாரம்… கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்…

ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி.

துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து பேசியுள்ளார். அப்போது, அவரின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என தெரிவித்தார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என பலரும் கூறிவரும் நிலையில், ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை அஜித்தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

மேலும் ‘ரஜினி மலை, அஜித் தலை’ என அடுக்கு வசனங்களில் வேற புகழ்ந்து தள்ளியுள்ளார். அமைச்சரின் இந்த பாராட்டை கேட்டு சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகர்கள்.

Categories

Tech |