Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இது கட்டாயம் இல்லை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மக்களின் நலனுக்காக அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் ரேஷன் கடைகளில் 3 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை மற்றும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி அமைச்சர் பெரியசாமி கூறும் போது, வெற்றிலை பாக்கு கடையில் கூட யுபிஐ வசதி உள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே பயன்படுத்துவதால் எந்த ஒரு பிரச்சனைகளும் வராது. ரேஷன் கடைகளில் இதனை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தலாம். இது ஒன்றும் கட்டாயம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |