ஒரு சில சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தவறான கருத்துக்களையும் பொய்யான தகவல்களையும் பரப்புகின்றனர். இதனால் பெரும் பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற பொய்யான தகவல் பரவுவதை தடுப்பதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ( youtube, twitter, facebook) போன்ற சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வதந்திகளாக பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Categories