தமிழகத்தில் சராசரியாக 3000 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் கொரோனாவை விட பன்றி காய்ச்சலும் டெங்குவும் அதிகம் காணப்படுகிறது.தமிழ்நாட்டில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே இடத்தை சேர்ந்த பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கு உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மேலும் காய்ச்சல்களில் 40% காய்ச்சல் என்ன வகை காய்ச்சல் என்று தெரியாது, சரியான பரிசோதனைகள் செய்தால் 60% காய்ச்சல்கள் என்னவென்று கண்டுபிடிக்க முடியும் தெரிவித்துள்ளனர்.