Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாளை பார்த்து அதிர்ச்சியான மாணவி…. எதற்காக தெரியுமா…. பெரும் பரபரப்பு…..!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனைப் போல விடைத்தாள்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரி சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளர். அந்த மனுவில்,தேர்வில் 720 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண் பெற்றதற்கான விடையத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும்தான் விடையளிக்காத நிலையில் தனக்கு அனுப்பப்பட்டு விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விடைத்தாளில் இடதுபுறம் இடம்பெற்ற தன சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். விடைத்தாள்களில் உள்ள கைரேகை சரிபார்த்தல் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் என்றும் தனது விடை தாளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு மருத்துவ இடத்தை காலியாக வைத்திருக்கும் படி உத்தரவிடவும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |