கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும்.
அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை வாய் வழியே சிரமப்பட்டு சுவாசிப்பது, திரையில் இருக்கும் வார்த்தைகளை வாசிக்கும் முறை போன்றவற்றை வைத்து தகுந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை சரியாக தெரிவித்து விடும் என்று நெதர்லாந்து நாட்டின் வபா அல்பவி என்ற ஆராய்ச்சியாளர் கூறியிருக்கிறார்.
இந்த செயலி மூலமாக சுமார் 89% சரியாக முடிவை காண்பிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த பரிசோதனை மிகவும் மலிவானதாகவும், குறைந்த வருமானமுடைய நாடுகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.