விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை, தமிழக அரசு போக்குவரத்து கழக, தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் கல்வித்துறை பெற்றோர் ஆசிரியர் களங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் தொடர்ந்து படிக்கட்டில் உயிர் இழப்பு மற்றும் பெருக்காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அபாயகரமான முறையில் பயணம் செய்வது குறித்து நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளின் மூலம் தெரிய வருகிறது.
இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பாதுகாப்பாக சென்று வர அனைத்து துறை கழக அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து வாகன உரிமையாளர்களை அனுமதி சீட்டு மீதும் தொடர்புடைய வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லமல் படிகட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வி துறை மற்றும் காவல் துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வித்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய தொடர்புடைய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.