புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும்.
கிராம்பு அதனுடைய தனித்துவமான வாசத்துக்கும், காரத்திற்கும் சிறப்பு பெற்றது ஆகும்.
தஞ்சாவூர் நெட்டிவேலை: ராஜராஜசோழனின் அரண்மனையை அலங்கரித்த ஒரு பெருமையை கொண்டிருக்கும் நெட்டி தாவரத்திலிருந்து உருவானதுதான் நெட்டி சிற்பக்கலை.
நரசிங்கப் பேட்டை நாதஸ்வரம்: நாதஸ்வரம் “ஆச்சமரத்தால்” ஆனது.
முன்பகுதியான அனுசு, வாகை மரத்தால் ஆனது. அதன்பின் காவிரி, கொள்ளிடம் கரைகளில் விளையும் நாணலில் சீவலி தயாரிக்கப்படுகிறது.
அரும்பாவூர் மர வேலைப் பாடுகள்: அரும்பாவூர் மரச்சிற்பங்கள் வாகை, மாவிலங்கை, அத்தி, வேம்பு, வேங்கை மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்டவை ஆகும்.
கருப்பூர் கலம்காரி ஓவியங்கள்: கலம்காரியின் தஞ்சாவூர் பாரம்பரியத்தில் விதானங்கள், குடைஉறைகள், தோம்பை (உருளைத் தொங்கல்கள்) மற்றும் தோரணங்கள் (கதவில் தொங்கும்) யாழி, மயில், அன்னம், பூக்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் போன்றவை இருக்கும்.
கள்ளக்குறிச்சி மரவேலைப்பாடு: இது கைவினைஞர்களால் பாரம்பரிய பாணியில் இருந்து பெறப்பட்ட அலங்காரம் மற்றும் வடிவமைப்புகளின் பயன்பாட்டை உள்ளடக்கியது ஆகும். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் மற்றும் திருக்கோவிலூர் தாலுகாக்களில் நடைமுறையில் இருக்கிறது.