சில தினங்களுக்கு முன்புதான் கூகுள் குரோமில் ஒருசில பக்ஸ் இருப்பதைக் கண்டறிந்து, டெஸ்க்டாப்பில் கூகுள் குரோம் பயன்படுத்தினால் உங்களது தகவல்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்பது குறித்த எச்சரிக்கையை ஒரு சைபர் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது மொஸில்லா பையர்பாக்ஸ் பிரவுசரின் யூசர்களுக்கும் புது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோமில் பல வகையான பிரச்சனைகள் உள்ளது என்பது தொடர்பாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். பல்வேறு யூசர்களுக்கு இந்த எச்சரிக்கையானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதே நிறுவனம் தான் இப்போது மொஸில்லா பையர்பாக்ஸ் பிரவுசரிலும் உங்கள் கணினியை பல விதமாகப் பாதிக்கக்கூடிய, உங்களது தகவல்கள் ஹேக் செய்யக்கூடிய பிரச்சனைகள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நீங்கள் எந்த லேப்டாப்பில் (அல்லது) சாதனத்தில் மொஸில்லா பையர்பாக்ஸ் பயன்படுத்தினாலும் அது ஹேக்செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது. பையர்பாக்ஸ் பிரவுசரில் பல பக்ஸ் (bugs) இருப்பதாகவும், இந்த பக்ஸ் வாயிலாக ஹேக்கர்கள் உங்கள் கணினியில் இருக்கும் பாதுகாப்புத் தடைகளை உடைத்து ரிமோட்டில் இயக்குவதுபோல, தொலைவிலிருந்து கொண்டு உங்கள் கணினி (அல்லது) லேப்டாப்பை ஹேக் செய்து தகவல்களைத் திருடலாம் என்று CERT-in தன் சமீபத்திய அறிக்கையில் கூறியிருக்கிறது.
XSLT எனும் பிழை கையாளும் போது ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது எனவும் அதன் வாயிலாக ஹேக்கிங் செய்யக்கூடிய அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சைபர் ஏஜென்சி தெரிவித்து உள்ளது. பிரவுசரில் ஒரு யூசருக்கு ஒரு இணைய-கோரிக்கை வைப்பதன் வாயிலாக தொலைவில் இருந்து உங்கள் கணினி (அல்லது) லேப்டாப்பை ஹேக்செய்ய முடியும். மேலும் ட்ரூபால் என்ற ஒரு ஓபன்சோர்ஸ் கோடிங் தளத்திலுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்படக்கூடிய தன்மை உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதற்கும் முன் ஒருசில பிளகின்ஸ் பயன்படுத்துவதன் வாயிலாக ஹேக்கர்கள் தகவல்களைத் திருடமுடியும் என்ற எச்சரிக்கை வெளியானது. கூகுள் குரோமில் ஏற்பட்ட பக்ஸ் வாயிலாக உங்கள் கணினியின் மொத்ததகவலும் ஹேக் செய்ய முடியும் என்ற அளவுக்கு ஆபத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் சிஇஆர்டி-இன், பையர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைத்து யூசர்களையுமே அதனுடைய லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறு கூறியுள்ளது.