Categories
சினிமா

ஜெயம் ரவியுடன் இணைந்த மற்றொரு பிரபல நடிகை….. யார் இவர்?….. வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி சைரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்ஷன், கிரைம், திரில்லர் ஜானரில் உருவாகும் சைரன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் சைரன் படத்தில் இணையும் மற்றொரு பிரபலத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி மலையாள மற்றும் தெலுங்கில் பிரபலமாக வலம் வரும் அனுபவமா பரமேஸ்வரன் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த வீடியோவை படக்குழு தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |