சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில் திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.
மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதனிடையே பிக் பாஸ் பிரபலம் வனிதா பீட்டர் பால் திருமண சர்ச்சையின் போது வனிதா மற்றும் ரவீந்தரிடையே பயங்கர சண்டைவெடித்தது. இந்நிலையில் ரவீந்தர் இரண்டாவது திருமணம் குறித்து வனிதா இதுவரை எந்த பதிவும் போடவில்லை என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வனிதா தற்போது ட்விட்டரில் போட்டு உள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.அதில் ஒரு வார்த்தையை பயன்படுத்தி அசிங்கமாக பேசியுள்ளார். இந்த பதிவு ரவிந்தற்காக போட்டது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.