Categories
சினிமா தமிழ் சினிமா

“நன்கொடை கேட்டு டார்ச்சர் பண்றாங்க” திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின் ஊழியர்கள் தன்னை தாக்கியதாக கூறி ஒரு செல்பி வீடியோ ஒன்றினை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அதோடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தேவஸ்தானத்தினர் 10.500 ரூபாய் நன்கொடை கேட்டதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |