Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை…. வெள்ள நிவாரணம் அறிவிப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…..!!!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள்உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலையானது (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்குவர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தியது. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூபாய்.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்களது நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன. இது தொடர்பான புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டுமாக பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு 130 மி.மீ மழைபெய்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு வெள்ள நிவாரணத்துக்காக கர்நாடக அரசு ரூபாய்.300 கோடியை வழங்கியுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள நிலைமையை ஆய்வு மேற்கொள்ள நேற்று இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பெங்களூருநகர் மற்றும் புறநகரில் சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் ஆகிய சேதமடைந்த உள் கட்டமைப்புகளை மீட்டெடுக்க வெள்ளச் சூழலை சமாளிக்க ரூபாய்.300 கோடி ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் மழை நீர் வடிகால் அமைக்க ரூபாய்.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. செப்டம்பர் 1-5 வரை நகரின் சில பகுதிகளில் இயல்பைவிட 150 % அதிகமாக மழை பெய்துள்ளது. இது சென்ற 32 ஆண்டுகளில் (1992-93) அதிக மழைப் பொழிவு ஆகும் என பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கர்நாடகத்தில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அம்மாநில அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 தினங்கள் “மஞ்சள்அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |