Categories
தேசிய செய்திகள்

லிஃப்டில் சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்….. “வலியில் துடிக்கும்போது உரிமையாளர் செய்த காரியம்”…. பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மின் தூக்கியில் அமைதியாக நின்று கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்த போது, அதன் உறிமையாளர் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின் தூக்கியில் சிறுவன், அந்த நாய் மற்றும் அதன் உறிமையாளரான பெண் மட்டுமே உள்ளனர். அப்போது அந்த நாய் சிறுவன் மீது பாய்ந்ததோடு, கடித்தும் விட்டது.

இதனால் வலியால் துடித்துக்கொண்டிருந்த சிறுவனிடம் மன்னிப்பும் கேட்காமல், பெரிதாக கண்டுக்கொள்ளாமல், சர்வ சாதாரணமாக அந்த பெண் நின்றுகொண்டிருப்பதோடு, தான் இறங்கவேண்டிய இடம் வந்தவுடம் வெளியே சென்று விடுகிறார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது காவல்துறையினர் அந்த பெண் மீது FIR பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |