Categories
சினிமா

‘ஆழ்வார்கடியன் நம்பி’ போஸ்டர் வெளியீடு….. குஷியில் ரசிகர்கள்….. டிரெண்டாகும் வீடியோ….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தின் அப்டேட்களை படக்குழு தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதன்படி பொன்னியின் செல்வன் கதையில் உள்ள கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை அறிவித்துள்ளது.இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார். அதில், “ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா… உன்னை மட்டும் பிளாக் செய்யவும் முடியல…. ரிப்போர்ட் செய்யவும்…. முடியல சரியானா தொல்லைப்பா” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த நாவலில் வந்தியத்தேவனாக வரும் கதாபாத்திரத்துடன் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரம் ஆழ்வார்கடியான் நம்பி. பொன்னியின் செல்வன் ரசிகர்களில் அதிகம் கவரப்பட்ட கதாபாத்திரம் ஆகும்.

Categories

Tech |