Categories
உலக செய்திகள்

தமிழகத்தில் இருக்கும் ஈழ தமிழர்களை அழைக்க முடிவு… சிறப்பு குழு அமைத்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசு, இந்திய நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது.

இலங்கை நாட்டில் கடந்த 1983 ஆம் வருடத்தில் ராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகளுக்கு இடையே பெரும் போர் மூண்டது. அப்போதிலிருந்து, அந்நாட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அதன்படி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்.

அதில் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போர் நிறைவடைந்து விட்டதால், இந்தியாவில் இருக்கும் தங்கள் மக்களை மீண்டும் அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை வைத்தது.

இலங்கை அதிபர், அந்த கோரிக்கையை ஏற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன்படி தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் மீண்டும் அவர்களின் நாட்டிலேயே குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |