Categories
உலக செய்திகள்

“200 ஆண்டுகள் வாழப்போறேனு சொன்ன நித்தி”…. ஆனா இப்ப அவரோட நிலை….. உடல்நல பாதிப்பில் பகீர் தகவல்….!!!

200 ஆண்டுகள் வாழும் அளவிற்கு என் உடலை நான் தயார் செய்து வைத்துள்ளேன். ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டு இருங்கள் என்று சில மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல உலக நாடுகளிடம் அவர் உதவியை கேட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடியுள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொள்வதாகவும், அவர் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையின் நித்யானந்தாவுக்கு அதிகளவு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளதுக்கு காரணம் அதிக அளவு தியானம் செய்ததால் அவர் உடல் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதால் நோய்வாய்ப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்யானந்தாவுக்கு மெல்ல கொள்ளும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க நித்தியானந்தாவுக்கு அதிக சொத்துக்கள் உள்ளது. இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் கோடி சொத்துக்கள் அவரது மடங்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த சொத்துக்களை கைப்பற்ற அவரது சிஷ்யர்களிடம் போட்டி ஏற்பட்டு வருகின்றது. அவர்களில் ஒருவர்தான் நித்யானந்தாவுக்கு ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தற்போது நித்தியானந்தாவிடம் சீடர்களாக இருப்பவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்காம் தேதி அவர் நேரலையில் வந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |