Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஓபிஎஸ் அதிரடி ….!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருநீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

அதிமுக அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கடந்த இரண்டாம் தேதி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வானது தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவித்துள்ளது. தனிநீதியின் உத்தரவை முறையாக ஆய்வு செய்யாமல் இரண்டு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியினுடைய தீர்ப்பை ரத்து செய்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மேலும் இரண்டு நீதிபதியினுடைய தீர்ப்பின் முக்கிய கருத்தாக, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை இபிஎஸ் அவர்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. அவர் விட்டுக் கொடுத்தார் என்பதற்காக தான் செயல்படாமல் இருக்க முடியாது என்ற ஒரு கருத்தையும் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த மனுவானதை சற்று முன்பு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இபிஎஸ் தரப்பில் கேவிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |