குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒகாடவ்கோ நகரில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென அந்த வண்டியில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ உள்ளிட்ட நகர்களில் கடந்த 10 ஆண்டுகளாக உணவு பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலை அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 1.9 மில்லியன் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.