NO ENTRY இல் வாகனம் ஓட்டினால் 1100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சிறப்பு தணிக்கை மூலம் 1300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி தவறான பதிவு எண்கள் வைத்திருப்பது, நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் இருப்பது, லைசென்ஸ் வைத்திராமல் இருப்பது போன்ற போக்குவரத்து விதி மீறல் செயல்களுக்கு அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்று சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு நடவடிக்கை போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நோ என்ட்ரி பயணத்திற்கு 100 ரூபாயும், ஆபத்து விளைவிக்கும் பயணத்திற்கு 1000 ரூபாயும் என மொத்தம் ரூ. 1,100 ஆக அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் மூக்கில் அபராதம் மிதிக்கும் இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.