சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் திராவிட கழக தலைமை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உட்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த திராவிட கழக தலைவர் கி வீரமணி தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கின்றது. அங்கு சுமார் 150 அடி உயரப் பெரியாறு சிலை அமைப்பதற்கான பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்துள்ளார். ஆர் எஸ் எஸ் பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருக்கின்றார்.
திராவிடர் கழக சித்தாந்தம் பாஜக சித்தாந்தம் நேரது சித்தாந்தம் திராவிட கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை. மேலும் அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருகின்றார்கள் இந்த நிலையில் பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் எனமூலம் அவரது தரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அவர் தலைவர் பதவிக்கு தகுதியானவரா? சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் ஆதிதிராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய விதமாக இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.