Categories
அரசியல் மாநில செய்திகள்

செல்லாது செல்லாது….! EPS ஐ தொடர்ந்து அதிரடி காட்டும் OPS….!!!!

கடந்த ஜூலை 11 ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவித்து இருந்தார்.

ஆனால் அவருக்கு முன்பாகவே இபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தெரித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Categories

Tech |