Categories
மாநில செய்திகள்

சிபிசிஐடி பதிவு செய்யும் எஃப்ஐஆர்கள்…. இணையத்தில் முதல் அறிக்கை பதிவேற்றம்…. நீதிமன்றத்தின் உத்தரவு…..!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. அதாவது பொதுமக்கள், புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் விசாரணை தொடர்பான அறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தனம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதாவது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யும் வழக்குகளின் முதல் விசாரணை தொடர்பான அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்தார். அதோடு சிபிசிஐடி விசாரணைக்கும் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுவதால் சம்பந்தப்பட்டவர்களால் வழக்கின் நிலையை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், முதல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் விசாரணையின் நிலையை தெரிந்து கொள்ள முடியும் எனவும் மனுதாரர் கூறி இருந்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிசிஐடி களில் முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப் படுவதால், முதல் கட்ட நிலையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால், சாட்சியங்களை கலைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு வழக்கு விசாரணையையும்  பாதிக்கும். இதனால்தான் முதல் கட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை என்றார்.‌

அதற்கு நீதிபதிகள் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து சிபிசிஐடி வழக்குகளை எதற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மனுதாரர் குறிப்பிடாததால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். இதனால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறினார். மேலும் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |