Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் திடீர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து இருக்கின்றது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு இருக்கின்றது. நிலநடுக்கத்திற்கு பின் அருகே உள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டிருக்கிறது.

மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 16 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது சென்டுவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூடிங் கவுண்டில் உணரப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இந்த பகுதியில் பல அதிகாரிகள் பசுமை வழிகளை ஏற்படுத்தி மீட்பு பணியாளர்கள் லோடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற விதமாக வழி ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த நிலையில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 248 பேர் காயமடைந்து இருக்கின்றனர். 12 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களில் 37 பேர் லூட்டிங் கவுண்டியின் கார்ஜே தீபத்திய சுயாட்சி பகுதியிலும் மற்றும் யான் நகரில் 28 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் நிவாரண பணி மேற்கொள்வதற்கு வசதியாக விரைவு சாலை வழியாக செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆயுத போலீஸர் மற்றும் ராணுவ வீரர்கள் போன்ற நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று காலையிலிருந்து அவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் சாலையை சீரமைக்கும் பாதிக்கப்பட்டுரை தேடும் மற்றும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |